முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக்கூடாது... சுவரொட்டியால் பரபரப்பு!

By காமதேனு

ஜெய்ப்பூரில் முஸ்லிம்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடவோ, விற்கவோ கூடாது என்று வலியுறுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீஸார் அகற்றினர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள நந்தபுரி காலனியில் உள்ள பல வீடுகளுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடவோ அல்லது விற்கவோ கூடாது என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. முஸ்லிம் ஜிஹாத்துக்களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்ற என்ற அந்த சுவரொட்டி அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நந்தபுரி காலனி அமைந்துள்ள 22வது வார்டு பாஜக கவுன்சிலர் அனிதா ஜெயின் தூண்டுதலால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அனிதா கூறியுள்ளார்.

இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தன் அடிப்படையில் அவர்களது வீட்டுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை போலீஸார் அகற்றினர். மேலும், அப்பகுதியில் அமைதி மற்றும் அமைதியைச் சீர்குலைக்க வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE