“டாஸ்மாக் பணத்தை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுங்க!” - திமுக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

By KU BUREAU

திருச்சி: கட்சி நிர்வாகிகளுக்கு 11 மாதங்களுக்கு மேலாக டாஸ்மாக் பணம் கொடுக்கப்படவில்லை எனவும், அதை வாங்கி கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்க மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ரங்கம் எம்எல்ஏ பேசினார்.

திருச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, தற்போது, பகுதி, தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ பழனியாண்டி பேசியது: திருச்சி மத்திய மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு ஒயின் ஷாப் (டாஸ்மாக்) பணம் 11 மாதங்களாக கொடுக்கவில்லை. தெற்கு மாவட் டத்தில் தொடர்ந்து கொடுக்குறாங்க.

அமைச்சர் நேருவுக்கு அவரது துறையை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும். கட்சி நிர்வாகிகளுக்கு கைச்செலவுக்காவது இந்த டாஸ்மாக் பணத்தை மாவட்டச் செயலாளர்கள் மாதாமாதம் வாங்கித் தரணும்.

இங்கு பி.பி, சுகர் பேசன்ட் (நோயாளிகள்) அதிகம் இருங்காங்க. அவுங்களுக்கு மாத்திரை வாங்குறதுக்காவது அந்தப் பணத்தை வாங்கிக் கொடுங்க என்றார். அவர் இப்படி பேசியதும், கட்சி நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றனர். ஒரு எம்எல்ஏவே டாஸ்மாக் வசூல் பணத்தை பிரித்துத்தர வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE