சென்னை: பாரதியின் 103ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பாரதியார் சங்கத்தின் 75-ம் ஆண்டு விழா சென்னையில் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பாரதியார் சங்க தலைவர் உலகநாயகி பழனி, முன்னாள் நீதிபதி ஜெகதீசன், சென்னை கம்பன் கழக செயலாளர் சாரதா நம்பி ஆரூரன், பாரதி வித்யா பவன் இணைச் செயலர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: "சென்னையில் வரும் 11ம் தேதி பாரதியாரின் 103ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வும் பாரதியார் சங்கத்தின் 75ம் ஆண்டு விழாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதையொட்டி, 103 தமிழ் அறிஞர்களுக்கு பாரதி சுடர் விருது வழங்கப்படுகிறது. மேலும், கல்வியாளர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகத்திற்கு பாரதி விருது வழங்கப்படுகிறது. பாரதி வித்யா பவனின் இணை இயக்குநர் கே.வெங்கடாசலம் பாரதி நுண்கலை விருதைப் பெறுகிறார்.
அத்துடன், பெண்ணிய சிந்தனையாளர் ஒருவருக்கு பாரதி புதுமைப்பெண் விருதும் வழங்கப்படுகிறது. லயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி. வைணவக் கல்லூரி, போரூர் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு பாரதி கல்வி சுடர் விருது வழங்கப்பட உள்ளது" என்று அவர்கள் கூறினர்.
» சாகர் கவாச்: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை!
» 50.45 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை