''பிரதமர் மோடி மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறாரே அதனால் அவர் தான் சிறந்த நடிகர்’’ என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிப்பைத் தாண்டி பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தன் பாஜக எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், இதற்காக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்துள்ள நேர்க்காணலில் பிரதமர் மோடியை விமர்சித்துப் அவர் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் “நீங்களும், நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் சிறந்த நடிகர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறாரே” என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து, கமல்ஹாசன் நல்ல அரசியல் தலைவர் கிடையாதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!