சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல், இரவு நேர கார் பந்தயம் (ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4) சென்னையில் கடந்தசனி, ஞாயிறுக்கிழமை மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.
சென்னை தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை,அண்ணா சாலை வரை 3.5 கி.மீ.சுற்றளவில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை போட்டிக்கான ஒத்திகை நடைபெற்றதால், 3 நாட்கள் அப்பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு வீரர்கள், பிற மாநில மற்றும் தமிழக கார் பந்தய வீரர்கள் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்டுதங்களது திறன்களை வெளிக்காட்டினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள்,பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் கார் பந்தயத்தை நேரில் ரசித்தனர்.
இந்நிலையில், போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால், சாலையை பழைய நிலைக்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கமான வாகன போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
» அனகாபுத்தூர் | அனுமதியின்றி வைக்கப்பட்ட நடிகர் விஜய் கட் அவுட் அகற்றம்
» காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்: தரையில் அமர்ந்து கவுன்சிலர்கள் தர்ணா
அதேபோல், கார் பந்தய போட்டிக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை அகற்றும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.