தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுகவினரிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆளுநருக்கு ஆர்எஸ்எஸ் சீருடையை அனுப்பி பொள்ளாச்சி நகர திமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க அனுமதிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திமுக ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. உச்சகட்டமாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.
ஆளுநரும் தனது பங்குக்கு சனாதனம் என பேசி வருகிறார். இந்த நிலையில், பொள்ளாச்சி நகர திமுகவினர் ஆளுநருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இனி ஆர்.எஸ்.எஸ். சீருடையையே ஆர்.என்.ரவி அணிந்து கொள்ளலாம் எனக் கூறி 4 செட் யூனிஃபார்மை பார்சல் அனுப்பியுள்ளனர். மேலும் பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திரண்ட திமுகவினர் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதிர வைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!