தெய்வீகத்தின் மத்தியில் வறுமை, 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தியின் மறுபக்கம் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாளில் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு தீபோற்சவம் நடைபெற்றது. அதில் விளக்குகளில் இருந்த எண்ணெய்களை ஏழை, எளிய சிறுவர் சிறுமிகள் சேகரித்துச் சென்ற காட்சிகளின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீடியோ பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2017-ல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. 2019-ல் 4.10 லட்சம், 2020-ல் 6 லட்சம், 2021-ல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஒளிவீசி கின்னஸ் சாதனை படைத்தன.
நடப்பு ஆண்டுக்கான இந்த நிகழ்வில் சுமார் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கியது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்ட பதினெட்டு ஊர்திகளின் ஊர்வலம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளியின் மறுபக்கத்தை உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தெய்வீகத்தின் மத்தியில் வறுமை… வறுமை ஒருவரை விளக்குகளில் இருந்து எண்ணெய் எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தினால், கொண்டாட்டத்தின் வெளிச்சம் மங்கலாகிறது. காடு மட்டுமின்றி ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளிர்வடைய, இதுபோன்ற ஒரு திருவிழா வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே... கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!