மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும்... கனிமொழி சொன்ன அதிர்ச்சி தகவல்!

By காமதேனு

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15 ம் தேதி மகளிர் வங்கி கணக்கிற்கு இந்த பணம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தமிழக மகளிருக்கு பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கனிமொழி பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று திமுக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டு பேசினார். "வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், மிகவும் முக்கியமான தேர்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மிகவும் பாடுபட்டுத்தான் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்றுள்ளோம்.

கோரிக்கைகளை கேட்கும் கனிமொழி

வரும் தேர்தல் என்பது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய தேர்தல். நம்முடைய அடுத்த தலைமுறை வாழ்க்கை கெட்டுப் போகாமல் இருக்க, அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.

மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரி பாக்கி 20,000 கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும்.

மகளிர் உரிமைத்தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்குத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை. வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை. தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை" என்று பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE