300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!

By காமதேனு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை அதிமுக சார்பில் 300 கிலோ எடையில், ஆறரை அடி உயர ஜெயலலிதா உருவ கேக் தயார் செய்யப்பட்டுள்ளது தொண்டர்களிடையே வைரலாக பரவ வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடினார். ஓபிஎஸ் உள்ளிட்டவர்களும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர் மீது வெறித்தனமான பக்தி கொண்டவர்கள். ஜெயலலிதாவை, தொலைவில் நின்று தரிசிப்பதே பாக்கியம் என்று கருதுபவர்கள். அவரை நேரில் சந்தித்தால் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் உடையவர்கள். அவர் தற்போது இல்லை என்றாலும் தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

ஜெயலலிதா வடிக கேக்

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலரையும் வியக்க வைக்கும் வகையில் மதுரையில் திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் சார்பில், ஜெயலலிதாவின் உருவம் கொண்ட 300 கிலோ எடையுள்ள கேக் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆறரை அடி உயரம் கொண்ட ஜெயலலிதா உருக கேக் சிலை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட கேக்கின் அருகே நின்று அதிமுகவினர் பலரும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE