தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாகவும், கடந்த 11ம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நவ.11ம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மதுரை-ரூ.52.73 கோடி, சென்னை-ரூ.48.12 கோடி, கோவை-ரூ.40.20 கோடி, திருச்சி-ரூ.40.02 கோடி, சேலம்-ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
நவ.12ம் தேதி மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி-ரூ.55.60 கோடி, சென்னை-ரூ.52.98 கோடி, மதுரை-ரூ.511.97 கோடி, சேலம்-ரூ.46.62 கோடி, கோவை-ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 464 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 467 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!
ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!
பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!
திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!
300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!