சிவகங்கை அருகே தாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மகனின் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வசித்து வரும் முருகன் மற்றும் ஈஸ்வரி தம்பதிகளின் மகன் தினேஷ்குமார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் தாயார் ஈஸ்வரி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் ஈஸ்வரி அம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மணிமண்டபம் ஒன்றைக் கட்டி கணவர் முருகன், மகன் தினேஷ்குமார் மற்றும் உறவினர்கள், ஈஸ்வரி அம்மாளை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தினேஷ்குமாருக்கு மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் விஜி தம்பதிகளின் மகளான காயத்ரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது தாயார் மறைந்து விட்ட நிலையில், அவரது முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தினேஷ்குமார் விரும்பினார். இதை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து ஈஸ்வரி அம்மாளின் நினைவிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தினேஷ்குமாருக்கும், காயத்ரிக்கும் ஈஸ்வரியம்மாளின் கல்லறையின் முன்பு இன்று திருமணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த உறவினர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மறைந்த தாயின் மீதான அன்பு காரணமாக, அவரது கல்லறை முன்பே மகன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!
விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!
அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!
லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!