சென்னை: “சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என பகுஜன் சமாஜ் செயற்குழு கூட்டத்தில் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் அறிவுறுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து, மாநில நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவராக பி.ஆனந்தன், மாநில பொறுப்பாளராக திருமதி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மீதமுள்ள தலைமை நிர்வாகிகளை அறிவிக்கும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம், சென்னை, பெரம்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் பங்கேற்றார். அவர் முன்னிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 20 நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, அசோக் சித்தார்த் பேசும்போது, “கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் வெகு விரைவில் வரவிருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.
» திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் அச்சம்
» அமோனியா வாயு தாக்கி ஊழியர் மரணம்: தூத்துக்குடியில் போராட்டம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு