கோவை பில்லூர் அணையில் கனமழை பதிவு!

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை (மே 22) மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், பில்லூர் அணையில் கனமழை பதிவாகியுள்ளது.

இன்று (மே 23) காலை நிலவரப்படி வெளியான வானிலை அறிக்கையில் கோவையில் பதிவான மழை அளவு விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, பீளமேடு பகுதியில் 33 மில்லி மீட்டர், வேளாண் பல்கலைக்கழ பகுதியில் 29.20 மில்லி மீட்டர், பி.என்.பாளையத்தில் 57.80 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையத்தில் 69 மில்லி மீட்டர், பில்லூர் அணையில் 74 மில்லி மீட்டர், அன்னூரில் 42 மில்லி மீட்டர், கோவை தெற்கில் 29.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், சூலூரில் 58.30 மில்லி மீட்டர், வாரப்பட்டியில் 29 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூரில் 70 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், பொள்ளாச்சியில் 15 மில்லி மீட்டர், மாக்கினாம்பட்டியில் 4.50 மில்லி மீட்டர், கிணத்துக்கடவில் இரண்டு மில்லி மீட்டர், ஆனைமலையில் 5 மில்லி மீட்டர், ஆழியாறில் 20.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், சின்கோனாவில் 67 மில்லி மீட்டர், சின்னக்கல்லாரில் 78 மில்லி மீட்டர், வால்பாறை பி.ஏ.பி யில் 115 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 120 மில்லி மீட்டர், சோலையாரில் 37 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE