நிலவுரிமை காக்க போராடும் மக்கள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

By KU BUREAU

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால், போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதிக்காமல் போராட்டங்களை திமுக அரசு ஒடுக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் மக்கள் பலர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. எனவே, ஏகனாபுரம் மக்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் தமிழக அரசு அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE