யூடியூபர் இர்ஃபானிடம் அதிகாரிகள் விசாரணை

By KU BUREAU

சென்னை: பிரபல யூடியூபர் இர்ஃபான். கடந்த 19-ம் தேதி வெளியிட்ட வீடியோவில், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அனைவருக்கும் அறிவித்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சை யையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, யூடியூப் சேனலில் இருந்து வீடியோவை இர்ஃபான் நீக்கினார்.

கடந்த 21-ம் தேதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்), பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இர்ஃபான் இல்லத்துக்கு சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் நோட்டீஸை நேரடியாக வழங்கி விசாரணை நடத்தினர். அப்போது, தான் செய்தது தவறு எனவும், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் இர்ஃபான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) இளங்கோ மகேஷ்வரன் கூறும்போது, “இர்ஃபான் முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். அவர்,குழந்தையின் பாலினம் குறித்து இந்தியாவில் பரிசோதனை செய்யவில்லை. அதனால், எந்த மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE