பார்முலா 4 கார் பந்தயம்: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

By KU BUREAU

சென்னை: பார்முலா 4 கார் பந்தயம், போர் நினைவுச்சின்னம், நேப்பியார் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை3.5 கி.மீ. சுற்றளவில் நடைபெறவுள்ளது. இந்த சாலைகளில் இன்று போட்டிக்கான ஒத்திகைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே இந்த சாலைகளில் இன்று முதல் 3 நாட்கள் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துசென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

# காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ஈ.வெ.ரா. சாலை வழியாக செல்லலாம்.

# அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.

# சிவானந்தா சாலை, கொடிமரச்சாலை முற்றிலும் மூடப்படும். சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை

# காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

# சென்ட்ரலில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார்சிலை வரை ஒரு வழிப்பாதை யானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

# முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடிமரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன்சாலை, ஈ.வெரா.சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக செல்லலாம்

# கனரக சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலை, வாலாஜா சாலை,அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா. சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE