டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் முதல்வர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்களின் சங்கங்களுடன் நவம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு 20% போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் குஷியில் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!