அரசியலில் இருந்து முன்னாள் முதல்வர் திடீர் ஓய்வு! பாஜக அதிர்ச்சி!

By காமதேனு

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான டி.வி.சதானந்த கவுடா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் சதானந்த கவுடா, இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று கட்சித் தலைமை கண்டிப்புடன் கூறிவிட்டதையடுத்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2011ல் பி.எஸ்.எடியூரப்பா ராஜினாமா செய்தபோது கவுடா கர்நாடக முதல்வரானார். 2014ம் ஆண்டில் அவர் சிறிது காலம் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். பின்னர் அவர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், பின்னர் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைக்கான மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

2024 மக்களவைத் தேர்தலின் பின்னணியில் பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கூட்டணி அமைத்துள்ள நிலையில், கூட்டணி அமைப்பது குறித்து கர்நாடக பாஜக தலைவர்கள் எவருடனும் தலைமை விவாதிக்கவில்லை என்று கவுடா கூறினார்.

2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளியான நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE