பகீர்; தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை முயற்சி!

By காமதேனு

தெலங்கானா மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே இம்முறை கடும் போட்டி நிலவுகிறது. 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதே நேரம் இந்த தேர்தலில் வென்று தனது பலத்தை நிரூபிக்க காங்கிரஸும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது.

காங்கிரஸ் நிர்வாகி கசுல பால்ராஜூ

பிஆர்எஸ் கட்சி தனது முழு வேட்பாளர் பட்டியலை அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 3வது கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.

இதில் பன்ஸ்வடா தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2018-ம் ஆண்டு போட்டியிட்ட கசுல பால்ராஜூக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர் இன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை முயன்றார். இதையடுத்து, அவர் உடனடியாக நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் கடந்த 2 முறையும் பன்ஸ்வடா தொகுதியில் நின்று தோல்வியடைந்ததார். இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு பாஜகவுக்கு தாவிய இவர் மீண்டும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி இம்முறை அவருக்கு மாற்றாக ரவீந்திர ரெட்டி என்பவருக்கு சீட் வழங்கியுள்ளது.

இதனால், மனம் நொந்து போன அவர், கட்சி மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், இவரது கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, சுகல பால்ராஜூ பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE