உதகை: உதகையில் அதிமுக போட்டி நகர்மன்ற கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் எம்.வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, துணை தலைவர் ஜே.ரவிகுமார் முன்னிலை வகித்தனர். இந்நிலையில், தங்கள் வார்டுக்கு முறையாக நிதி ஒதுக்காமல், வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படுவதில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், நகராட்சி அலுவலகம் வளாகத்தில் மேஜை, நாற்காலி போடப்பட்டு, போட்டி நகராட்சி கூட்டம் நடத்தினர்.
இதில், இளைஞர் பாசறை செயலாளர் ஹக்கீம் பாபு தலைமையில் கவுன்சிலர்கள் குமார், அன்பு செல்வன், சகுந்தலா, தனலட்சுமி, ஜெயலட்சுமி, சுருதி ஆகியோர் பங்கேற்றனர். இதனால் நகராட்சி அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போட்டி கூட்டத்தில், தங்கள் வார்டுக்கு முறையாக நிதி ஒதுக்காததால், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதாக குற்றம் சாட்டினர்.
» நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி: குன்னூரில் அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!
» மதுரையில் எய்ம்ஸ் எப்போது கட்டி முடிப்பீர்கள்? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி