மண்ணில் ஈரம் உண்டு... நீரில் அடித்துச் செல்லப்பட்ட நாயை மீட்டு நெகிழவைத்த இளைஞர்கள்!

By காமதேனு

கள்ளக்குறிச்சி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை, இளைஞர்கள் மீட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோமுகி அணையில் இருந்து அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விருகாவூர் தரைப்பாலம் முழுமையாக மூழ்கியுள்ளது. இதையடுத்து வாகனங்கள் தரைப்பாலத்தில் ஊர்ந்தபடி சென்று வருகின்றன.

நாயை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்

இதனிடையே ஏராளமான பொதுமக்கள் வெள்ள நீரை பார்வையிடுவதற்காக பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி, வெள்ள நீரில் விழுந்தது. நீரின் வேகத்தால் நீந்த முடியாமல் தத்தளித்த நாயை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து, நாயை வெள்ள நீரில் இருந்து மீட்டனர்.

நாயை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்

அப்போதும் நாய், நடக்க முடியாத அளவிற்கு சோர்ந்து இருந்ததால், அதனை பாலத்தில் இருந்து தூக்கி வந்து சாலையில் விட்டனர். இளைஞர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE