விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நகாய் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு அமல் செய்யப்படும்.
திண்டிவனத்தில் இருந்து உளுந்துார்பேட்டை செங்குறிச்சி வரை, 74 கி.மீ துாரத்திற்கு உள்ள நான்கு வழிச் சாலைகளை உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிட். நிர்வகித்து வருகிறது. இதற்கான சுங்கச் சாவடி விக்கிரவாண்டியில் உள்ளது.
நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு அமல் செய்யப்பட்ட சுங்க கட்டண விவரம் பின் வருமாறு: கார், ஜீப்,பயணிகள் வேன் ஆகியவற்றிக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ. 105 மற்றும் மேற்கண்ட வாகனங்கள் பல முறை பயணிக்க ரூ.155 எனபழைய கட்டணமே வசூலிக்கப்ப டுகிறது.
மாதாந்திர கட்டணம் ரூ.3,090 என்று இருந்தது ரூ.3,100 ஆக மாறியுள்ளது. இலகு ரக வாகனம் ஒரு வழிக் கட்டணம் ரூ. 180 மற்றும்பல முறை பயணிக்க ரூ.270 எனபழைய கட்டணத்தில் தொடர்கிறது.
» கூலியில் இணைந்தார் சவுபின் சாகிர்
» நடிகை அளித்த பாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்குப் பதிவு
மாதாந்திர கட்டணம் ரூ. 5,405 ஆக இருந்த கட்டணம் ரூ.5,420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக், பேருந்து ஒரு வழி கட்டணம் ரூ.360, பல முறை பயணிக்க ரூ.540 என பழைய நிலையில் தொடர்கிறது. மாதாந்திர கட்டணம் ரூ. 10,815 ஆக இருந்தது ரூ.10,845ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சு வாகனம் இரு அச்சுகளுக்கு மேல் ஒரு வழிக் கட்டணம் ரூ.580, பல முறை பயணிக்க ரூ.870 ஆகவே தொடர்கிறது. மாதாந்திர கட்டணம் ரூ.17,380 ஆக இருந்தது ரூ.17,425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ. 1,000, உள்ளூர் வாகன கட்டணம் வகை 1 மாதாந்திர பாஸ் ரூ.150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ.300 ஆகியவை பழைய கட்டண அளவில் மாற்றமின்றி வசூலிக்கப்படுகிறது.