கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

By KU BUREAU

சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளி, கல்லூரியில்கடந்த 1995-2001 காலகட்டத்தில் பயின்ற மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். இவர், அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி யதாக இ-மெயில் மூலம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் நீலாங்கரை மகளிர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த ஏப்.22-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். விடுமுறை கால அமர்வில் நீதிபதிசி.சரவணன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நடந்த வாதம்: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன்: 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாககூறப்படும் பாலியல்சம்பவம் தொடர்பாக தற்போது இ-மெயில் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த முன்னாள் மாணவி தற்போது 40 வயதைகடந்திருப்பார்.

தவிர, அவர் இங்கு இல்லை. எனவே, மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. மனுதாரர் 30 நாட்களாக சிறையில் இருக்கிறார். அவரை போலீஸார் காவலில் எடுத்துகூட விசாரிக்கவில்லை. பல முன்னாள் மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், வேறு யாரும் புகார் தரவில்லை.

நீதிபதி: இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றால், கைதான ஸ்ரீஜித் கிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரித்திருக்கலாமே.

காவல் துறை தரப்பு: சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இதுதொடர்பாக பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கு விசார ணையை இன்றைக்கு (மே 23) நீதிபதி தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE