சென்னை: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் நாளை (ஆக.29) இரவு 8 மணி முதல் செப்.2-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.
இதன் காரணமாக ஆகஸ்ட் 30-ம்தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே 30-ம் தேதி சந்திப்புக்காக உறுதிஅளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கான சந்திப்பு குறித்து தெரிவிக்கப்படும்.
ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை அண்ணாசாலை, ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணைஅரங்கும் செயல்படாது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
» அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசாமி ஆஜர்: 70 வயதானதால் விலக்கு கோரி நீதிபதியிடம் மனு
» ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி பாஜக சார்பில் வழக்கு