மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,898 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்துதிறக்கப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,284 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,898கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 117.44 அடியாகவும், நீர் இருப்பு 89.44 டிஎம்சியாகவும் இருந்தது