குட்நியூஸ்; நவம்பர் 13-ம் தேதி விடுமுறை: தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

By காமதேனு

தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறிப்பாக வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பும் பொதுமக்கள் விடுமுறை இல்லாவிட்டால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பயணிகள் கூட்டம்

மேலும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்புவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதைடுத்து தீபாவளிக்கு மறுநாளான, நவம்பர் 13-ம் தேதி விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், தீபாவளி

நவம்பர் 13-ம் தேதி திங்கட்கிழமை அன்று பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக வருகிற 18-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்

புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்

அதிர்ச்சி! கரு கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE