ஆளுநருக்கு எதிரான மனுவை விரைந்து விசாரியுங்கள்- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

By காமதேனு

ஆளுநர் ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என 2 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படுகிறது அதனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இந்த 2 மனுக்களை உடனே விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE