நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? காலம்தான் தீர்மானிக்கும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

By KU BUREAU

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் எங்கு குற்றம் நடந்தாலும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வழக்கு போடாமல் திருச்சிக்கு அழைத்துவந்து வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். திருச்சி மாவட்ட எஸ்.பி, தனிராஜ்ஜியம் நடத்துகிறார்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர், மக்களவைத் தேர்தலின்போது கோவையில்பாஜகவுக்கு ஆதரவாகப் பணியாற்றியவர். இதற்காக அவருக்கு இந்த பரிசுவழங்கப்பட்டுள்ளதா? மாநிலத்தை ஆள்வது திமுகவா? பாஜகவா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான பணியில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி உண்டா? இல்லையா? என்பதைகாலம்தான் தீர்மானிக்கும். ஒரு தம்பிக்குஅண்ணன் சொல்ல வேண்டியதை விஜய்யிடம் தெரிவித்துள்ளேன். அதுகுறித்து பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம்சிறக்க வாழ்த்துகிறேன்.தமிழகத்துக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடி முதலீடுவந்ததாகவும், 31 லட்சம் பேருக்குவேலைவாய்ப்பு வழங்கியதாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை.

மிகவும் அனுபவம் வாய்ந்த, கட்சிக்குவிசுவாசமான நபரான மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இப்போதைய அரசியல்வாதிகளில் மிகவும் புத்திசாலியானவர். அவரை தற்குறி என பேசுவது தவறு. படித்தவரான அண்ணாமலை அப்படி பேசக்கூடாது. தனிநபர் விமர்சனம், அநாகரீகப் பேச்சுகளை எல்லோரும் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE