சென்னை வந்தடைந்தது வெற்றி துரைசாமியின் உடல் - இன்று மாலையில் இறுதிச்சடங்கு!

By காமதேனு

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சென்னை வந்தடைந்தது. சிறிது நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்பு இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

மறைந்த வெற்றி துரைசாமி

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக அவரது உடலைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அவரது உடமைகள் தனியாக கிடைத்த நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் மேலும் பதட்டம் கூடியது.

தனது மகனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்தார். இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெற்றியின் உடலை மீட்ட வீரர்

வெற்றி துரைசாமி ‘என்றாவது ஒரு நாள்’ என்றப் படத்தையும் இயக்கி உள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், இவரது நண்பர் நடிகர் அஜித்தும் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணியளவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சோலையூரில் உள்ள வெற்றி துரைசாமி இல்லத்தில் சிறிது நேரம் உடல் வைக்கப்படும். பின்பு, சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE