குன்னூர்: குன்னூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலமாகச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணனின் அவதாரம் நிகழ்ந்த ஆவணி ரோகிணியும் அஷ்டமி திதியும் இணைந்த நாளில் கோகுலாஷ்டமியாகவும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊர்வலமாக செண்டை மேளம் முழங்க கிருஷ்ணரின் தேர்பவனியுடன் விநாயகர் கோயில் வரை சென்றனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
» தென்காசியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்!
» துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது - சர்ச்சைக்கு பதிலளித்த ரஜினிகாந்த்