முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!

By காமதேனு

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரு தினங்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழன் அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், நேற்று மற்றும் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் முதல்வரை பரிசோதித்த மருத்துவ குழு, அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE