தாம்பரம்: இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் முகாமில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில்தான் எனப் பெருமிதம் தெரிவித்தார்.
தாம்பரம் அடுத்த ஆலந்தூர், அப்பாவு தெருவில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நேற்று நடை
பெற்றது. முகாமுக்கு ஆலந்தூர் சட்டப் பேரவை உட்பட்ட 160-வது வட்ட திமுக சார்பாக வட்டச் செயலாளர் கே.பி.முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இந்த முகாமின்போது 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து, ஆர்வத்துடன் தங்களை திமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களுக்கு, திமுகவின் கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்தியாவில், பிஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 30 முதல் 40 சதவீத கிராமங்களில் மின்சாரம், சாலை வசதி இல்லை.
» மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகா மனுவை நிராகரிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.26, 2024
ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 1972-ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கப்பட்டது. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறகு, அவரது மறு உருவமாக இருப்பவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என தெரிவித்தார்.