திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

நத்தம்/சென்னை: திண்டுக்கல் மாவட்டம் நத்தம்அருகேயுள்ள ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவர் பட்டாசு ஆலைநடத்தி வருகிறார். இங்கு நேற்றுமுன்தினம் இரவு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த கண்ணன் என்றசின்னன்(42), சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்ற மாசா(30) ஆகியோர் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சென்ற நத்தம் போலீஸார் இருவரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வத்தை தேடி வருகின்றனர்.

ரூ.3 லட்சம் நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த கண்ணன், முனீஸ்வரன் ஆகியோரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE