பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற செய்ய காங்கிரஸ் முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பிரிவினைவாத சிந்தனையோடு தேர்தலை சந்திக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. முரண்பட்ட கூட்டணியை அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்திய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். தேர்தலில் வெற்றி பெற்றால், ஜம்மு காஷ்மீருக்கு ‘தனிக் கொடி’ என்ற தேசிய மாநாட்டு கட்சியின் அறிவிப்பை காங்கிரஸ் ஏற்று கொள்கிறதா?

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிக்கையை காங்கிரஸ் ஒப்புக் கொள்கிறதா ? ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதன் மர்மம் என்ன இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

10 ஆண்டுகளாக பதவியில் இல்லையென்றால் இந்தியாவை பிளக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஏன்? மதம், மொழி, சாதி ரீதியாக ஒருமைப் பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றத்தை காங்கிரஸ் கட்சி செய்து வருவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE