செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: மதுரையிலும் வழக்கு

By கி.மகாராஜன்

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

புதுக்கோட்டை மாவட்டம் வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் செந்தில்பாலாஜி.

மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

இதனால் செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்துறை, கலால்துறை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. தற்போது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

எனவே, அவர் அமைச்சர் பதவியில் தொடர தடை விதித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE