குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

By காமதேனு

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வசதிபடி கைரேகை பதியலாம் என்றும், கைவிரல் ரேகை வைக்கும்போது ஆவணங்கள் எதுவும் கோரக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரேகையைச் சரிபாா்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை

இந்த நிலையில், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.

ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலைக் கூறக்கூடாது என்று ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE