தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இலங்கையில் இன்று நடைபெறும மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கொழும்பு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவப் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து . இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.
மேலும், நெல்லையில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கதக்கது. சாதி நச்சுச்செடியை ஒழிக்க வேண்டியது எல்லோருடைய கடமை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. புதியவர்களும் அரசியலுக்கு வந்து அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும்.
இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை. எல்லோருடைய கொள்கைகளையும் மக்கள் பார்த்து யார் சிறந்தவர் என்று முடிவு செய்து கொள்ளட்டும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!