வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆராயவும், புள்ளி விவரத் தரவுகளைத் திரட்டவும் முதல்வர் ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்திருந்தார். தற்போது அந்தக் குழுவும் தங்களின் அறிக்கையை இறுதி செய்யும் நிலையில் உள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை அண்மையில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பசும்பொன்னுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது, தேவர் நினைவிடத்தில் மண்டபங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது போன்ற முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளால் மற்றொரு பெரிய சமுதாயமான வன்னியர்கள் அதிருப்தி அடைந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தது என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!