5 மாநில சட்டப்பேரவை தோல்வி பயம் காரணமாக எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விசாரணை குழு அமைப்போம் என மத்திய அமைச்சர் கூறுவது சரியா? இதெல்லாம் ஒரு பதிலா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி மகள் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையி,ல ‘’நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்கக் கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஆனால், ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து, அதற்காக திமுக தனது ஆட்சியை இழந்தது.
தற்போது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. நமக்கு வரும் தகவலின் படி 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்கிறார்கள். அந்த பயத்தில் எதிர்கட்சிகளை மிரட்டும் நோக்கத்தோடு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.
தற்போது கூட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதற்கு விசாரணைக்குழு அமைப்போம் என்கிறார் மத்திய அமைச்சர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு விசாரணைக் குழு அமைப்போம் என்று சொல்வது சரியா? இதெல்லாம் ஒரு பொறுப்பான மத்திய அமைச்சரின் பதிலா என்பதை எல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பாஜகவின் மக்கள் விரோத செயல்களை எல்லாம் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு முழுவீச்சில் உழைக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!