சிவகங்கை மாவட்டத்திற்கு செல்ல உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து மாவட்டம் முழுவதுமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் சட்டப்போராட்டங்கள் மூலம் கட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று கூறிய பன்னீர் செல்வம், தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வருவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். இதன் ஒரு பகுதியாகச் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்திக்க, நாளை ஓபிஎஸ் சிவகங்கை செல்ல உள்ள நிலையில், ஓபிஎஸ் வருகையைக் கண்டித்து சிவகங்கை நகர் அதிமுக நிர்வாகிகள், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்தைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில், ‘கழகத்தைக் கயவர்களுக்குக் காட்டிக் கொடுத்த பன்னீர் செல்வமே வராதே’ என்றும், ‘துரோகத்திற்கு விலை போன அமாவாசை பன்னீர்செல்வமே உன்னை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது’ என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே இந்த போஸ்டர் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!