நான் பாஜகவில் சேரவில்லை? உயிருள்ளவரை அதிமுககாரன்தான் - அவிநாசி முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு!

By காமதேனு

நான் பாஜகவில் இணையவில்லை. உயிருள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் என அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி தெரிவித்துள்ளார். எப்படி பட்டியலில் என் பெயர் வந்தது என்றே தெரியவில்லை. எனக்கும் இதுவரை பாஜகவின் பட்டியல் புலப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இன்று இணைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் பட்டியலில், அவிநாசியில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த ஏ.ஏ.கருப்பசாமி பெயரும் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஏ.ஏ.கருப்பசாமி, “காரைக்குடி முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, என்னை பாஜக இணைய கேட்டார். நான் இணையவில்லை என்று தெரிவித்துவிட்டேன்.

ஜெயலலிதா இந்த கட்சியில் எனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளார். இந்த கட்சியை விட்டு நான் வேறெந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என தெரிவித்துவிட்டேன். எப்படி பட்டியலில் என் பெயர் வந்தது என்றே தெரியவில்லை. எனக்கும் இதுவரை பாஜகவின் பட்டியல் புலப்படவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி பழனிசாமி அவிநாசி வருவதை ஒட்டி, அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன். என் மீது தேவையற்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்.ஜெயலலிதா கொடுத்த வாய்ப்புக்காக நான் என்றைக்குமே அதிமுககாரனாக மட்டுமே இருப்பேன்' என்று அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருப்பசாமி முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசியபோது, 'கிராமத்து கோயில் பூசாரியை எம்எல்ஏ-வாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா' என கிராமத்து மொழியில் பேசி வணங்கியதை கண்டு, அன்றைக்கு ஜெயலலிதா அவையில் வாய்விட்டு சிரித்ததை பலரும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக கட்சியில் இன்றைக்கும் சொல்லி வருகின்றனர்.

கருப்பசாமி

ஏற்கெனவே அதிமுகவில் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்து, இப்போது செயல்படாத நிலையில் உள்ளவர்களையே பாஜக கட்சியில் சேர்த்துள்ளது என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக வில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருந்திருப்பார்கள். அதிமுகதான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி” என்று தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...


ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE