தமிழகத்தில் 2026-ல் திராவிட கட்சிகள் இல்லாத கூட்டாட்சியை உருவாக்குவோம்: அண்ணாமலை நம்பிக்கை

By KU BUREAU

காஞ்சிபுரம்: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டாட்சியை உருவாக்குவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓரிக்கை சென்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு எல்லா இடத்திலும் ஊழல் எட்டிப் பார்க்கிறது. திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜக வரும்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். அதற்கான முத்தாய்ப்பான கூட்டணியையே 2024-ம் ஆண்டு உருவாக்கினோம். 2026-ல்திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியில் எப்படி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்றும், 2026-ல் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE