ஆக்கிரமிப்பு நீர்நிலைகள், நிலங்களை மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும்அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை பொறுப்புதலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், அரசுநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த2004-ம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், அதை கண்காணிக்கவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது, முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறதா, அந்தக்குழுக்கள் களஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கிறதா எனஅடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்தநடவடிக்கை குறித்து அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE