பட்டாசு வியாபாரிகள் தற்காலிக செட் போடுவதை தவிர்த்து கான்கிரீட்டால் ஆன செட் அமைக்குமாறு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எழும்பூர் ருக்மணி சாலையில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பட்டாசு விற்பனை செய்வதில் வணிகர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினை தொடர்பாக தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வியாபாரம் செய்வதற்கு விரைவாக லைசென்ஸ் வழங்கிட வேண்டும் என்று தீயணைப்புத்துறை டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட துயர சம்பவங்களை டிஜிபி சுட்டிக்காட்டினார். எங்கள் தரப்பில் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்வதற்கான உறுதி அளித்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு வருங்காலங்களில் பொதுவான இடம் ஒன்று தேர்வு செய்து அங்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இதனை வணிகர் சங்கம் பேரமைப்பு அடுத்த ஆண்டு நிறைவேற்றுவோம் என உறுதியளித்துள்ளோம். தீயணைப்புத்துறை சார்பில் மீண்டும் ஆய்வு செய்து பட்டாசு விற்பனைக்கு விரைவாக லைசென்ஸ் வழங்குவது குறித்த முடிவுகள் நாளை காலை தெரிவிக்கப்படும் என்று கூறினார்கள்.
தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை தயார் செய்து அதில் எவ்வாறு பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். டிஜிபி தரப்பில் தற்காலிகமாக செட் போடுவதை தவிர்த்து நிரந்தரமாக கான்கிரீட்டாலான செட் அமைக்கும் வகையில் ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனார்.
தற்போது அதற்கான சூழல், இடவசதி இல்லாத காரணத்தால் அடுத்த ஆண்டு இதனை அறிமுகப்படுத்துகிறோம் என்று வணிகர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளோம்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!