பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு... சென்னை போலீஸார் அதிரடி!

By காமதேனு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் அனுமதி மறுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றிற்கு அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஆளும் பாஜக அரசு, 3-வது முறையாக இம்முறையும் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது. மற்ற கட்சிகளைப் போலவே, பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ’என் மண் என் மக்கள்’ என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடை பயணமானது 234 தொகுதிகளையும் சென்று சேரும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபயணத்தை பிப்ரவரி 25-ம் தேதி பல்லட்டத்தில் பிரதமர் மோடி முடித்து வைக்கிறார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

இதற்கு முன்னோட்டமாக சென்னையில் வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, போக்குவரத்து போலீஸாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த 3 இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி, சென்னை காவல்துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஷெனாய் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு பாஜக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE