இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர்கள் இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். இதையடுத்து, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தில் வசிக்கும் புகழேந்தி - கீதா தம்பதியின் மகள் பிரியதர்ஷினி. தாய் கீதா உயிரிழந்த நிலையில் தந்தை புகழேந்தி பிரியதர்ஷினியை வளர்த்து வந்தார். பிரியதர்ஷினி அருகிலுள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரியதர்ஷினிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பிரியதர்ஷினி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதை கண்டறிந்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார்.
இதேபோல், சென்னை பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்த ராஜ் பாலாஜி என்ற மாணவன் குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு இருந்தது.
உடனே போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ் பாலாஜி மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி ராஜ் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் டெங்கு வெகு வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு நேற்று வரை ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!