தஞ்சாவூரில் மென் பொருள் நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களை உற்சாகப்படுத்த அவர்களுக்கு 11 சொகுசுக் கார்களை பரிசளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஹம்சவர்தன் என்ற மென் பொறியாளர்கள் கடந்த 2014-ல் பிபிஎஸ் என்ற பெயரில் மென் பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கினார். நான்கு பேருடன் துவங்கப்பட்ட அந்த நிறுவனம் தற்போது 400 பேருடன் வளர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து ஹம்சவர்தன், தனது ஊழியர்களுக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை வழங்க முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நட்சத்திர விடுதி ஒன்றுக்கு விருந்துக்காக அழைத்து இருந்தார்.
அந்த விருந்தின் போது, தான் நிறுவனம் துவங்கிய போதிலிருந்து தற்போது வரை தன்னோடு பணியாற்றி வரும் 5 பெண் ஊழியர்கள், 6 ஆண் ஊழியர்கள் என 11 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு சொகுசுக் காரை பரிசாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஹம்சவர்தன்.
தங்களது நிர்வாக இயக்குநரின் இந்த திடீர் செயல் காரணமாக சற்று நேரம் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி இருந்த ஊழியர்கள் பின்னர் சுதாரித்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் ஹம்சவர்தனுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த ஒருமுறை மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக பணியாற்றி, நிறுவனத்தின் உயர்வுக்கு பங்களிக்கும் ஊழியர்களுக்கு கார்களை பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக ஹம்சவர்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னும் பத்து ஆண்டுகளில் டெல்டா பகுதியைச் சேர்ந்த பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே தனது லட்சியம் என்கிறார் இந்த இளம் பொறியாளர்.
இதையும் வாசிக்கலாமே...
'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?
இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!
தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!
பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!
வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?