சஞ்சய் சிங் எம்.பி-யாக பதவியேற்க அனுமதிக்க முடியாது... மாநிலங்களவை தலைவர் கறார்!

By காமதேனு

மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் பதவி ஏற்றுக்கொள்வதற்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கடுமை காட்டி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்து வந்த சஞ்சய் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை

இந்த பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி தரப்பில் மீண்டும் சஞ்சய் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமின் வழங்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

துணை குடியரசுத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர்

இருப்பினும் நீதிமன்ற காவலில் பிப்ரவரி 5ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ள சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு, நாடாளுமன்ற உரிமை குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவி ஏற்புக்கு அனுமதிக்க முடியாது என மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தற்போது இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE