பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுகிறது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.
இந்த பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழகம் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினும் புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுகிறது என இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசியதாவது, “பிடித்த மாநிலம் மற்றும் பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை ஒதுக்குவதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல.
நிதி ஆணையம் தான் தீர்மானிக்கிறது. அனைத்து மாநிலங்களோடும் ஆலோசித்து, நிதி ஆணையம்தான் அறிக்கை தருகிறது. அதையே நான் பின்பற்றுகிறேன்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். இதையடுத்து 2024-25ம் ஆண்டிற்கான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!
'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?
கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!
நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!
நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!