கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் கசிந்த தகவல்!

By காமதேனு

நாம் தமிழர் கட்சியை கைப்பற்ற அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ சோதனைக்குப் பிறகு புது தகவல் உலா வருகிறது.

நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், தென்னகம் விஷ்ணு, பாலாஜி உள்ளிட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த வெள்ளிக்கிழமை காலை திடீர் சோதனை நடத்தியது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து நிதிபெற்றதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்போது, சீமானிடமிருந்து, நாம் தமிழர் கட்சியை கைப்பற்ற சாட்டை துரைமுருகன் முயற்சிப்பதாக புது தகவல் ஒன்று உலாவரத் தொடங்கியுள்ளது.

சீமான்

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறியதாக வெளியான தகவலில், "சாட்டை துரைமுருகன் உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி பெற்றது, தமிழ்நாட்டில் ஆயுதப் புரட்சிக்கு தனியாக ஆட்களை திரட்டியது, வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றது உறுதியாகி உள்ளது.

சாட்டை துரைமுருகன், ஆயுதப்புரட்சிக்கு தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து பெறுவது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை, தவறாகப் பயன்படுத்தி அவருக்குத் தெரியாமல் தடை செய்யப்பட்ட செல்போன் செயலிகள் மூலம் தன்னிச்சையாக வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பினரிடம் பேசி, மீண்டும் ஈழத்தில் புரட்சி செய்வோம். உதவி செய்யுங்கள் எனக் கூறி பல கோடி ரூபாய் நிதியை சட்டவிரோதமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சாட்டை துரைமுருகன்

சீமான் பெயரை பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சி நிதி என விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் பெற்ற நிதியில் குறிப்பிட்ட தொகையை கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு, பெரும் நிதியை சாட்டை துரைமுருகன் அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். அதோடு நிதி பெற்ற விவகாரத்தில், சீமானை சிக்க வைத்து கட்சியை சாட்டை துரைமுருகன் கைப்பற்ற திரைமறைவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

கட்சியைக் கைப்பற்ற முடியவில்லை என்றால், இரண்டாம் கட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து சீமானுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் முழு ஆதரவுடன் நாம் தமிழர் கட்சியை உடைத்து தனி அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததுள்ளார்” என்று சொல்லப்பட்டுள்ளது.

சீமானிடமிருந்து நாம் தமிழர் கட்சியை சாட்டை துரைமுருகன் கைப்பற்ற உள்ளது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE